யூடியூபை அதிர வைத்த துணிவு படத்தின் டிரைலர்.., போனி கபூர் ஜி ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?.., விஜய் ரசிகர்கள் கேள்வி!!

0
யூடியூபை அதிர வைத்த துணிவு படத்தின் டிரைலர்.., போனி கபூர் ஜி ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?.., விஜய் ரசிகர்கள் கேள்வி!!
யூடியூபை அதிர வைத்த துணிவு படத்தின் டிரைலர்.., போனி கபூர் ஜி ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?.., விஜய் ரசிகர்கள் கேள்வி!!

அஜித்தின் துணிவு படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் ஆதாரம் கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணிவு திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன்னர் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால், துணிவு திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆனது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் பின்னர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்து கொண்டிருந்த ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வெளியானது. மேலும் துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 30 மில்லியன் வியூஸ்களை கடந்து விட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.., களமிறங்கும் No.1 Show!!

அதாவது தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு ட்ரெய்லர் 30 மில்லியன் வியூஸ்க்கு மேல் வந்ததுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா இருந்தால் காட்டுங்கள் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வருகிற 4 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here