நான் இந்த மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன் – பளிச்சென்று போட்டுடைத்த விஜய் தேவரகொண்டா!!

0
நான் இந்த மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன் - பளிச்சென்று போட்டுடைத்த விஜய் தேவரகொண்டா!!

விஜய் தேவரகொண்டா, நடித்துள்ள Liger படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், தான் ரீமேக் படங்களில் மட்டும் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

விஜய் பேட்டி:

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள Liger திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில், நடிகர் விஜய் தேவரகொண்டா தீவிரமாக இறங்கியுள்ளார். செல்லும் இடங்களில் எல்லாம் இவருக்கு, ரசிகர்கள் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்படுகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில், விஜய் நடித்துள்ள Liger படமும் ரவி தேஜாவின் Amma Nanna O Tamila Ammayi ஒரே கதையம்சம் கொண்டது என  தகவல் வெளியானது. இது பற்றி பேசிய விஜய், இந்த இரண்டு கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை, Liger படத்தின் பெரிய அம்சமே அம்மா சென்டிமென்ட் தான் என தெரிவித்தார்.

மேலும், தனக்கு ரீமேக் படங்களில் நடிப்பது பிடிக்காது என்றும், அது போன்ற படங்களில் நடிக்கவே மாட்டேன் என்றும் தெரிவித்தார். நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இந்த பதிவு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here