விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் தேவரகொண்டாவா?? அவரே கொடுத்த ஓபன் டாக்!!

0

தெலுங்கு வட்டாரங்களில் தற்போது இளம் நடிகராக உருவெடுத்து சினிமா துறையில் வலம் வருபவர் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவர் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும், தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மகளிர்களின் மனதை கட்டி இழுத்தவர். இதனால் அவருக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உருவாகியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கின்றன. கடந்த 25ம் தேதி வெளியான பான் இந்தியா படமான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் அண்மையில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் கூறியதாவது, நான் வெறித்தனமான விராட் கோலி ரசிகன். மேலும் அவருடைய ஆட்டம் மிகவும் அருமையாக இருக்கும் என்று பேச்சை தொடங்கிய போது, இடையில் ஒருவர் கிரிக்கெட் வீரர்களின் கதையை படமாக எடுப்பது என்றால் யார் கதையை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்ட போது, அதற்கு விராட் கோஹ்லி கதையை நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிலுக்கு ஏராளமான ரசிகர்கள் கோஹ்லியின் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா பொருத்தமான ஒருவர் தான் என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here