தளபதி விஜய் முதன் முதலில் நடத்தி வைத்த திருமணம் இதுதான் – நீங்கள் இதுவரை பார்த்திராத புகைப்படம்!!

0
கூல் சுரேஷை காப்பி அடிக்கும் விஜய் பட நடிகை.., சிம்புவிடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!
கூல் சுரேஷை காப்பி அடிக்கும் விஜய் பட நடிகை.., சிம்புவிடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!

நடிகர் விஜய், தனது 6 வயதில்  தனது அப்பா அம்மாவின்  திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த போட்டோக்கள், தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

முதல் திருமணம்:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், யூடியூப் வாயிலாக  தனது வாழ்க்கை நிகழ்வுகளை சொல்லி வருகிறார். அந்த வகையில், நடிகர் விஜய் அவருடைய இளம் வயதில்  அவரது அம்மா அப்பாவான தங்களுக்கு  திருமணம் நடத்தி வைத்ததை  பற்றி சுவாரசிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, நான் ஒரு கிறிஸ்தவன், ஷோபா ஒரு இந்து என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், சிவாஜி சார் மனைவி தாலி எடுத்துக் கொடுத்து  நடந்த எங்கள் திருமணம், கிட்டத்தட்ட  விஜய்க்கு ஆறு வயது இருக்கும் போது மீண்டும் இரண்டாவதாக கிறிஸ்தவ முறைப்படி நடந்தது என குறிப்பிட்டார்.

நடிகர் விஜய் ஏற்கனவே, பாக்யராஜ் மகன் சாந்தனு உள்ளிட்ட பல நடிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். ஆனால், அதற்கெல்லாம் முன்பு, 6 வயதில் தனது அப்பா அம்மாவுக்கு திருமணம் நடத்தி வைத்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. போட்டோவுடன் கூடிய இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here