பெண் வேடம் அணிந்து உள்ள தளபதி விஜய்… இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம்!!!

0

இளைய தளபதி என்றழைக்கப்படும் விஜய் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர். மேலும் இவரது படங்களின் வசூல் சாதனை கோடியில் தான் இருக்கும். அந்த அளவிற்கு பெயர் மற்றும் புகழின் உச்சியில் இருப்பவர். தற்போது இவரது அரிதும் அரிதான சிறு வயது பெண் வேடமிட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் பெரும் வைரல் ஆகிவருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் விஜய்  அவர்கள். நடிப்பு, வசனம் என ஒவ்வொரு படத்திலும் பட்டையை கிளப்பும் அளவிற்கு நடித்து இருப்பார். அவரது நடனத்திற்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த கதாப்பாத்திரம் தான், இந்த படம் தான் என்று இல்லை எல்லா கதாப்பாத்திரங்களை எல்லா படங்களும் அவருக்கு வெற்றி தான். இந்நிலையில்  விஜய் தனது 65 வது படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் விஜய் அவர்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அது அவர் பெண் வேடம் போட்ட ஒரு புகைப்படம். இதுவரை யாரும் கண்டிராத இந்த அரிய புகைப்படம் இணையத்தில்  வைரல் ஆகிவருகிறது. மேலும் அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து ரசித்து அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அவர் சினிமாவில் பிரியமானவளே மற்றும் வேட்டைக்காரன் போன்ற படங்களில் பெண் வேடத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார் இதனையும் அவர் ரசிகர்கள் ரசித்து வந்தனர். தற்போது அவரின் 65 வது படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here