விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் ஒட்டிய வில்லங்க போஸ்டர் – மிரண்டு போன அரசியல் கட்சியினர்!!

0

தளபதி விஜய்யின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 சர்ச்சை போஸ்டர் :

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான நடிகர் விஜய், தனது 48 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தளபதி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, தற்போது அவர் நடித்து வரும் தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து படத்தின் 2ம் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுரையில் தளபதி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது. அதாவது, ஒற்றை தலைமையே எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர். தற்சமயம் அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை போய்க் கொண்டிருப்பதால் இது போன்ற போஸ்டர் ஒட்டி இருப்பது, அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here