நயன்தாரா திருமணத்தில் Smart-ஆக வந்து தலை காட்டிவிட்டு சென்ற தளபதி விஜய் – குஷியில் ரசிகர்கள்!

0
நயன்தாரா திருமணத்தில் Smart-ஆக வந்து தலை காட்டிவிட்டு சென்ற தளபதி விஜய் - குஷியில் ரசிகர்கள்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்தில் பாலிவுட் பிரபலங்களில் இருந்து பலரும் கலந்துகொண்டனர். திருமணத்தில் விஜய்யும் கலந்துகொண்டாரா என ரசிகர்கள் ஆர்வமாக தேடி கொண்டிருக்கும் சமயத்தில் விஜய் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

நயன்தாராவின் திருமணத்தில் விஜய்:

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள பிரமாண்டமான ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. திருமணத்தில் பாலிவுட் நடிகர்களில் இருந்து பல திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர். திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் யாரும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். நானும் ரவுடி தான் திரைப்படத்தின் மூலமாக சந்தித்துக்கொண்ட இவர்கள் இன்று கணவன் மனைவியாக நிற்கிறார்கள். திருமணத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழ் திரையுல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல முக்கிய பிரபலங்கள் அனைவருமே திருமணத்தில் கலந்துகொண்டனர்.

திருமணத்தில் விஜய்யும் கலந்து கொண்டாரா என்கிற பேச்சு எழுந்தது. விஜய் நயன்தாராவுடன் இணைந்து சிவகாசி, வில்லு, பிகில் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது விஜய்க்கு ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கிறது. திரைப்பட ஷூட்டிங் பிஸியிலும் நயன்தாராவின் அழைப்பை ஏற்று smart ஆக வந்து கலந்துகொண்டுள்ளார். திருமணத்தில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here