சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் நடத்திய மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரியில் ஏற்பட்ட சர்ச்சையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு தொடர்பு இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டது. இந்நிலையில் இது குறித்து விஜய் ஆண்டனி தனது X பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் என் மீது அதிக பாசம் கொண்ட அனைவருக்கும் வணக்கம். இப்பொழுது நான் சிறிய மன வேதனையில் இருக்கிறேன். என்னை பற்றி எழுந்த சர்ச்சைகளுக்கு இந்தக் கடிதம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அண்மையில் ஒரு சகோதரி, யூடியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானையும் தொடர்புப்படுத்தி பொய்யான வதந்தியை பரப்பி இருக்கிறார். அது முழுக்க முழுக்க பொய். எனவே அந்த யூடியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மானநஷ்ட வழக்கில் வரும் பணத்தை நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சலில் குணசேகரனாக இந்த 4 பேரில் ஒருவர் தான்.., வெளியான சூப்பர் அப்டேட்!!
அது முற்றிலும் பொய்யே! pic.twitter.com/x7sRGOu4tu
— vijayantony (@vijayantony) September 15, 2023