கொரோனா படுத்தும் பாடு தாங்கமுடியாமல் பொங்கியெழுந்த விஜய் ஆண்டனி – அவரே வெளியிட்ட பதிவு!!

0

கொரோனா தொற்றினால் நாளுக்கு நாள் பல உயிர்கள் பலியாகி கொண்டிருக்கிறது மற்றும் பலரும் வறுமையில் வாடி கொண்டிருக்கின்றனர். இவர்களது நிலையை குறித்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது ஒரு ட்வீட் செய்துள்ளார்.

விஜய் ஆண்டனி ட்வீட்:

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை தாக்கம் தலைவிரித்தாடுகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாம் அலையில் கொரோனா மிகவும் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். ஊரடங்கின் காரணமாக வறுமையில் இருப்போர் உணவுக்கு கூட திண்டாடி வருகின்றனர்.

மக்கள் படும் அவஸ்தையை தாங்க முடியாமல் விஜய் ஆண்டனி தற்போது ஒரு ட்வீட் செய்துள்ளார். ‘அதில் ‘கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகியில் போட்ட மாதிரி, உலகத்தை ஒரேயடியாக பாம் போட்டு அழிச்சுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்” என்று கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் உண்மையில் இவர் கொரோனா படுத்தும் பாட்டை தாங்க முடியாமல் இப்படி பதிவு செய்துள்ளாரா அல்லது இவரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என புலம்பி கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here