இது என்னடா விஜய் ஆண்டனிக்கு வந்த சோதனை.., நொந்து போன படக்குழுவினர்!!

0
இது என்னடா விஜய் ஆண்டனிக்கு வந்த சோதனை.., நொந்து போன படக்குழுவினர்!!
இது என்னடா விஜய் ஆண்டனிக்கு வந்த சோதனை.., நொந்து போன படக்குழுவினர்!!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் தமிழரசன் திரைப்படத்திற்கு பலவகையில் பிரச்சனைகள் கிளம்பியுள்ளது. இதனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி:

கோலிவுட்டில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அந்த வகையில் இவர் நடித்த நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்களும் அடங்கும். குறிப்பாக பிச்சைக்காரன் திரைப்படம் இவருக்கு அமோக வெற்றியை தேடி தந்தது. இதனை தொடர்ந்து காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் தமிழரசன் திரைப்படம் சில காரணத்தால் ரிலீஸ் செய்ய முடியாமல் விஜய் ஆண்டனி தவித்து வருகிறார். பெப்சி சிவா என்பவர் தயாரித்துள்ளார். இவர் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக பணியாற்றி வருகிறார். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடையாரில் உள்ள ஒரு கோயிலில் பி.ஜே.பி-யின் முக்கிய விஜபி பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற சிலர் முன்னிலையில் சிறப்பாக நடத்தி முடித்தார்.

வெந்து தணிந்தது காடு படத்தை புகழ்ந்த முன்னணி நடிகை.., இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட ஸ்டோரி!!

இந்நிலையில் இவர் ஏற்கனவே தயாரித்த படத்தின் கடன் பிரச்சனைகள் அதிகமாக இருப்பதால், கடன் கொடுத்தவர்கள் கடனை அடைத்தால் மட்டுமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று கறாராக பேசியுள்ளார்கள். இந்த சம்பவத்தால் படம் வெளியாவதில் கால தாமதம் ஏற்படுவதால் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வருத்தத்தில் இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here