யூடியூபில் புதிய மைல் கல்லை எட்டிய “வாத்தி கம்மிங்” சாங் – விஜய் படத்தின் பாடல்ன்னா சும்மாவா!!

0

விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் புதிய சாதனை படைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ட்ரெண்டிங்கில் விஜய் பாடல்:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் மாஸ்டர்.  கடந்த 2020ல் வெளியாக வேண்டிய படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி போனது.  ஆனாலும், இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் டாப் அளவில் ஹிட் அடித்தன.

அதிலும் குறிப்பாக விஜய்யின் என்ட்ரி சாங் “வாத்தி கம்மிங்” என தொடங்கும் பாடல் மிகவும் பிரபலமாகியது.  தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளமான யூடியூபில் புதிய சாதனையை படைத்துள்ளது.  அதாவது, இந்த பாடல் வெளியாகி தற்போது வரை 2.8 மில்லியன் நபர்களின் லைக்குகளை குவித்துள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here