தளபதி 65யின் ஷூட்டிங் புகைப்படங்கள் – தெறிக்கவிட்ட மாஸ் அப்டேட்!!

0

தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகரான விஜய் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வரும் நிலையில் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விஜய் 65

வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக திகழும் விஜய் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் தனது அப்பாவின் பேச்சை கேட்டே ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து வந்தார். இந்நிலையில் அரசியல் காரணமாக ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தனது அப்பாவை விட்டு விலகியுள்ளார். மேலும் தனது கதைகள் அனைத்தையும் அவரே தேர்ந்தெடுத்து வருகிறார்.

வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார் விஜய். அட்லீ இயக்கத்தில் 2 படங்கள் நடித்திருந்தார். அடுத்த படத்திற்கும் வந்து அட்லீ கால் சீட் கேட்க, முடியாது என்று மறுத்து விட்டாராம். வேறு இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறிவிட்டாராம். அதனால் அடுத்தடுத்து பல இயக்குனர்களுடன் இணைந்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 50 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் சக்கை போடு போட்டது. இந்நிலையில் தற்போது அவர் தனது 65 வது படத்தில் நடித்து வருகிறார். இதை நெல்சன் இயக்குகிறார். தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது ஜார்ஜியாவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் ஷூட்டிங் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here