தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – தெறிக்கவிட்ட சன் பிக்சர்ஸ்!!

0

தளபதி விஜயின் பிறந்தநாள் வருகிற 22ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது ஓர் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி 65ன் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் வருகிற 21ம் தேதி வெளியாகவுள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தளபதி 65:

தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் தளபதி விஜய் தனது 65 வது படத்தை நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தளபதி 65ன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா பகுதியில் நடைபெற்றது. இதை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னை பகுதியில் எடுக்க படக்குழு திட்டமிட்டது.

இதற்காக சென்னையில் மிக பிரமாண்ட முறையில் செட்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக படடிப்பிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது தளபதி விஜயின் பிறந்தநாள் வருகிற 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தற்போது விஜயின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் ஓர் அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி தளபதி 65ன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜூன் 21ம் தேதி வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தளபதி 65ம் தயாரிப்பாளரான சன் பிக்சர்க்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தற்போது தளபதி ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here