‘நம்ம தளபதி 65 கம்மிங் ஒத்து’ – மரண மாஸ்ஸாக வெளியான விஜய் 65 ஃபரஸ்ட் லுக் போஸ்டர்!!

0

தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகரான தளபதி விஜயின் 65வது திரைப்படத்திற்கான ஃபரஸ்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விஜய் 65 ஃபரஸ்ட் லுக்:

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் படம் என்றாலே அது ரசிகர்களுக்கு தனி விருந்து தான். ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பல பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். மேலும் மெர்சல் படத்தில் இருந்து கடந்த வருடம் வெளியான மாஸ்டர் திரைப்படம் வரை மாஸ் ஹிட் தான். விஜய் ரசிகர்கள் வைட்டிங்கிலே வெறி ஆவார்கள். அந்த அளவிற்கு தரமான சம்பவங்களுடன் விஜய் படத்தின் கான்செப்ட் இருக்கும்.

மேலும் புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்புகளை வாரி வழங்கி வருகிறார் நம்ம தளபதி. கடந்த வருடம் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அந்த அளவிற்கு விஜயின் 65 வது படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த 65வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கூட ஜார்ஜியாவில் நடைபெற்றது. மேலும் தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக முதன்முதலாக இணைந்துள்ளார்.

இதில் மேலும் ஒரு விருந்தாக அனிருத் இசையமைக்கிறார். அப்படி என்றால் படத்தை பற்றி சொல்லவா வேண்டும். இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. படத்திற்கு beast என்று பெயரிட்டுள்ளனர். படத்தில் இதுவரையிலும் இல்லாத விதமாக மாஸ் கெட்டப்பில் உள்ளார் நம்ம தளபதி. போஸ்டரை பார்த்தே படத்திற்கு அதிக ஆர்வம் எழுந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here