திருமணமாக போகும் குஷியில் நயன்தாராவுக்கு விருந்து வைத்த விக்னேஷ் சிவன் – வைரல் வீடியோ உள்ளே!

0
கழுத்தில் தாலி தொங்க சிவப்பு நிற உடையில் நயன்தாரா.. முத்தமிட்ட விக்னேஷ் சிவன் - வெளியான திருமண புகைப்படம்!
விக்கியின் செயலால் நயன்தாராவுக்கு வந்த வினை - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோகம்!!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விக்னேஷ் சிவன் திடீரென ரொமான்டிக் டின்னர் ஒன்றை ஏற்பாடு செய்து நயன்தாராவுக்கு பிடித்த அனைத்து கடல் உணவுகளையும் சமைத்து ஊட்டி விடும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்:

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பல கோடி வசூலை அள்ளி குவித்து கொண்டிருக்கிறது. ஜூன் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருமண ஏற்பாடுகளை துவங்கியுள்ளனர். திருமணத்திற்கு முன்பு பல நேத்திக்கடன்கள் இருந்த காரணத்தினால் வரிசையாக பல கோவில்களுக்கு சென்று நேத்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

நேற்று கூட விக்னேஷ் சிவனின் குல தெய்வம் கோவிலுக்கு இருவரும் ஜோடியாக சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்துள்ளனர். பொங்கல் வைத்து வழிபாடு செய்த வீடியோவையும் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு பிடித்த அனைத்து கடல் உணவுகளையும் சமைத்து நயன்தாராவுக்கு ஊட்டி விடும்படியான வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தளபதி 66 ஷூட்டிங்கை பாதிலேயே விட்டு சென்னை திரும்பிய விஜய்?? வைரலாகும் போட்டோ!!

பிடித்தவர்களுக்கு தன் கையால் ஊட்டி விடுவதில் அவ்வளவு ஆனந்தம் இருக்கிறது எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் விருந்து வைக்கும்படியான அந்த வீடியோ சமூக வலை பக்கங்கள் எங்கிலும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here