‘விடுதலை 1’ திரைப்படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா….,மார்ச் 8 இல் ட்ரைலர் ரிலீஸ்…,

0
'விடுதலை 1' திரைப்படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா....,மார்ச் 8 இல் ட்ரைலர் ரிலீஸ்...,
'விடுதலை 1' திரைப்படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா....,மார்ச் 8 இல் ட்ரைலர் ரிலீஸ்...,

நடிகர் பரோட்டா சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘விடுதலை 1’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைவெளியீட்டு விழா

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். அந்த வகையில், தமிழ் சினிமாவிற்கு ஆடுகளம், அசுரன் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை வைத்து ‘விடுதலை’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அதனை திரைக்கு கொண்டு வருவதற்கான இறுதி கட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்கு முன்னதாக, ‘விடுதலை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘உன்னோடு நடந்தால்’ என்ற பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் இலவச மின்சார மானியத்தில் திடீர் மாற்றம்., முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இதை தொடர்ந்து இப்படத்திற்கான முழு இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து, ‘விடுதலை 1’ திரைப்படத்தின் டிரைலரும் இந்த நிகழ்வில் திரையிடப்பட உள்ளது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here