மேடையில் அறுந்து விழுந்த வீடியோ ஸ்கிரீன்.. படுகாயம் அடைந்த நடன கலைஞர்கள் – பதறவைக்கும் வீடியோ!

0
மேடையில் அறுந்து விழுந்த வீடியோ ஸ்கிரீன்.. படுகாயம் அடைந்த நடன கலைஞர்கள் - பதறவைக்கும் வீடியோ!

ஹாங்காங்கில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் கேண்டபாப் மிரர் என்கிற நடனக்குழுவினர் நடனமாடிக் கொண்டிருக்கும் போது வீடியோ ஸ்கிரீன் கீழே விழுந்து பெரும் பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர்:

சீனாவில் அதிகமாக நடனக்குழுவினர்கள் இருந்தாலும் மக்களிடையே மிகவும் பாப்புலர் ஆனவர்கள் கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர். இவர்கள் பாப்புலர் ஆனதற்கு காரணம் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றதன் மூலம் தான் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளி காட்டினார்கள். இவர்களுக்கு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஹாங்காங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில், கேண்டபாப் மிரர் நடனக்குழுவினர் கலந்து கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் எதிர் பாராத விதமாக மேலே கட்டப்பட்டிருந்த வீடியோ ஸ்கிரீன் நடனக்குழுவினர் மேலே விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் கிட்டத்தட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்கிரீன் கீழே விழுந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here