தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்கி வருபவர் தான் ஆக்சன் கிங் அர்ஜுன். கடந்த மாதம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மங்காத்தா படத்திற்கு பிறகு அவர்கள் இரண்டு பேர் சேர இருப்பது குறிப்பிடத்தக்கது.