ஐயோ முடியல.., விடாமுயற்சி ஷூட்டிங் முடியுமா?? முடியாதா?? வெளியான ஷாக்கிங் நியூஸ்!!!

0
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இம்மாதம் முடிவுக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகியது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியாததால் மே மாதம் வரை ஷூட்டிங் தொடரும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஷூட்டிங் முடிக்க லேட்டாகுவதற்கு நடிகர் அஜித் தான் காரணம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அது உண்மை கிடையாது. அதாவது படப்பிடிப்புக்கு ஒரு நாளைக்கு மட்டும் 50 லட்சம் வரை செலவாகிறதாம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து நிதி நெருக்கடி இருப்பதால்தான் படப்பிடிப்பு தாமதமாவதாக சொல்லப்படுகிறது. இதனால் மே மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முடியலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here