சிக்குன்னு சிறுத்தை குட்டியான ஜீவா பட நடிகை… டிப்ஸ் கேட்டு கதறும் ரசிகர்கள்!!!

0

பல குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மோகன் ராமன். அவரின் மகள் வித்யு லேகா ஆவார். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் உடல் எடையை குறைத்து சிக்கென மாறி  உள்ளார். அவரின் இந்த உடல் எடை குறைப்பை பார்த்த ரசிகர்கள் அவரிடம் டிப்ஸ் கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

பல பிரபலங்களின் வாரிசுகள் திரைக்கு வந்து சாதித்து வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் வித்யு லேகா. இவர் இயக்குனர் கௌதம் மேனன் படைப்பில் ஜீவா நடிப்பில் வெளியான நீதானே என் பொன் வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக திரை முன் வந்தார்.

அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், மாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தன்னுடைய படத்தில் நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த இவர், தன்னுடைய உடல் அமைப்பால் பல கேலி கிண்டலுக்கு ஆளானார்.

அதாவது இவர் குண்டான உடல் உடன் திரைக்கு வந்தார். இதனால் அவர் பல உருவ கேலிகள் பலவற்றை சந்தித்தார். மேலும் இவரின் இன்ஸ்டா போஸ்ட்களுக்கும் ஒரு சில நெட்டிசன்கள் இவரை விமர்சித்து உள்ளனர்.

இந்நிலையில் இவர் தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து சிக்கென்று மாறி  உள்ளார். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புடவையில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் உடல் எடையை குறைக்க அவரிடம் கமெண்டு மூலம் டிப்ஸ் கேட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vidyu Raman (@vidyuraman)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here