சடலமாக மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி .,  சென்னைக்கு உடல் தகனம்., சொன்னதை செய்த சைதை துரைசாமி!!

0
சடலமாக மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி .,  சென்னைக்கு உடல் தகனம்., சொன்னதை செய்த சைதை துரைசாமி!!

சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த வாரம் தனது நண்பருடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அதையடுத்து மலைப்பாங்கான பகுதியில் செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் மூழ்கியது.  அதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர் கோபிநாத் என்பவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் வெற்றி துரைசாமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.  மேலும் மீட்பு பணியினர் வெற்றி துரைசாமியை  தேடும் பணியை 8 ஆவது நாளாக தொடர்ந்திருந்தனர்.

TNPSC குரூப் 4 தேர்வர்களே…, தேர்வுக்கு இப்படி படித்தால் எளிதில் வெற்றி நிச்சயம்…, முழு விவரம் உள்ளே!!

இதையடுத்து நேற்று சட்லஜ் நதிக்கரையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் வெற்றியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.  இதற்கிடையில் தன் மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 1 கோடி என சைதை துரைசாமி அறிவித்திருந்தார். மேலும் தான் கூறிய வார்த்தையை நிறைவேற்றும் வகையில் வெற்றி துரைசாமியின் உடலை கண்டுபிடித்த மீட்பு பணியாளருக்கு ஒரு கோடி ரூபாயை சைதை துரைசாமி வழங்கியுள்ளார். மேலும் இன்று மாலை 5 மணிக்கு சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது  இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெற்றி துரைசாமியின் உடல் வைக்கப்படவுள்ளது. மாலை 6  மணி அளவில் கண்ணம்மா பேட்டை மயான பூமியில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாம்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here