என்னடா சிக்கன் மட்டன்.., இந்த pepper fry ஒன்னு போதும்.., மற்ற அசைவ உணவுகளை மிஞ்சிடும்!!

0
என்னடா சிக்கன் மட்டன்.., இந்த pepper fry ஒன்னு போதும்..,மற்ற அசைவ உணவுகளை மிஞ்சிடும்!!
என்னடா சிக்கன் மட்டன்.., இந்த pepper fry ஒன்னு போதும்..,மற்ற அசைவ உணவுகளை மிஞ்சிடும்!!

அசைவ உணவுகளில் கடல் சார்ந்த உணவு வகையான மீன், இறால், நண்டு போன்றவை நம் உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடியது. அந்த வகையில் சிலர் இறாலை விரும்பி தங்களின் உணவுகளில் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் இந்த இறாலை வைத்து கொஞ்ச டிப்ரெண்டாக ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • இறால் – 1/2 கிலோ
  • வெங்காயம் – 5
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 3 டீஸ்பூன்
  • எண்ணெய் – 5 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • மிளகாய் வத்தல் – 3
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை விளக்கம்

இறால் பெப்பர் ப்ரை ரெசிபி செய்வதற்கு முதலில் நாம் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை ஒரு பவுலில் போட்டு அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு உப்பு, சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். பின் ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பட்டை வத்தல், வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

ஈரமான ரோஜாவே 2 பிரபலமான பார்த்திபனின் உண்மையான மனைவியை பார்த்துள்ளீர்களா?? என்ன இவளோ அழகா இருக்காங்க!!

இப்போது இதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் மற்றும் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதோடு நாம் மசாலா போட்டு மிக்ஸ் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு ஒரு 10 நிமிடங்களுக்கு பின் கொத்தமல்லி இலைகளை போட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்போது நமக்கு சுவையான இறால் பெப்பர் ப்ரை ரெசிபி தயார் .மேலும் இந்த பெப்பர் இறால் ரெசிபியை நம் உணவில் எடுத்துக் கொண்டால் மிளகில் இருக்கும் காரத்தன்மையால் எப்படிப்பட்ட சளி இருமலும் ஓடிப்போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here