சித்திரை மாத விரதமிருப்பவர்களா நீங்க.., இதோ உங்களுக்காக அசைவ சுவையில் ஒரு சைவ ரெசிபி!!

0
சித்திரை மாத விரதமிருப்பவர்களா நீங்க.., இதோ உங்களுக்காக அசைவ சுவையில் ஒரு சைவ ரெசிபி!!
சித்திரை மாத விரதமிருப்பவர்களா நீங்க.., இதோ உங்களுக்காக அசைவ சுவையில் ஒரு சைவ ரெசிபி!!

பொதுவாக இந்த சித்திரை மாதத்தில் பலர் விரதங்களை கடைபிடித்து வருவதை வழக்கமாக வைத்து வருகின்றனர். அப்படி இந்த மாதிரியான நாட்களில் சில அசைவ பிரியர்களுக்கு சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். அப்படி பட்ட நான்வெஜ் விரும்பிகளை குஷிப்படுத்தும் வகையில், அசைவ சுவையில் ஒரு சைவ ரெசிபி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்;

  • பலாக்காய் – 250 கிராம்
  • தக்காளி – 2
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 2
  • பச்சை மிளகாய் – 2
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • பட்டை, கிராம், ஏலக்காய் – சிறிதளவு

செய்முறை விளக்கம்;

இந்த பலாக்காய் ரெசிபி சமைப்பதற்கு 250 கிராம் பலாக்காயை எடுத்து கொள்ளவும். இப்போது ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம், ஏலக்காய் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடவும். மேலும் இதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அதோடு மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்களை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.

இந்த ஹேர் பேக் ஒன்னும் போதும்.., உங்க முடி செழிப்பாக வளர! மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

இதோடு நாம் நறுக்கி வைத்துள்ள பலாக்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும். இப்போது இதில் 1 கப் தண்ணீர் சேர்த்து குழம்பை மூடி வைக்கவும். இதன் பிறகு ஒரு 20 நிமிடங்களுக்குப் பின் அடுப்பை ஆப் செய்யவும். இப்போது நமக்கு மணக்க மணக்க அசைவ சுவையில் பலாக்காய் குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here