சுடசுட இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட கெட்டியா ஒரு மட்டன் குருமா.., ட்ரை பண்ணி பாருங்க மிச்சமே இருக்காது!

0
சுடசுட இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட கெட்டியா ஒரு மட்டன் குருமா.., ட்ரை பண்ணி பாருங்க மிச்சமே இருக்காது!
சுடசுட இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட கெட்டியா ஒரு மட்டன் குருமா.., ட்ரை பண்ணி பாருங்க மிச்சமே இருக்காது!

நம்மில் பலருக்கு இட்லி தோசைக்கு தொட்டுக்க சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டு போர் அடிசிருக்கும். அதனால புதுசா ஏதாச்சும் ஸைடிஸ் சாப்பிடணும்னு ஒரு ஆசை இருக்கும். அப்டி ஒரு ஆசைய புல்பில் பண்ற மாதிரியான சூப்பரான ரெசிபி, அதுவும் நமக்கு பிடிச்ச மட்டனை வைத்து சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருள்;

மட்டன் – 250 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

தக்காளி – 3

சின்ன வெங்காயம் – 50 கிராம்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 4

பட்டை, கிராம், சோம்பு – சிறிதளவு

தேங்காய் – 50 கிராம்

பாதம் – 5

கசகசா – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

செய்முறை விளக்கம் ;

இந்த மட்டன் குருமா சமைப்பதற்கு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம் போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். இதன் பிறகு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இதோடு 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மல்லி தூள், 1 டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.

இதோடு நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை போட்டு கிளறி விட்டு குக்கரை மூடி 10 விசில் வைத்து கொள்ளவும். மேலும் மிக்ஸி ஜாரில் தேங்காய், கசகசா, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பாதம் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும். இப்போது குக்கரை திறந்து நாம் அரைத்து வைத்துள்ள இந்த பேஸ்டை சேர்த்து நன்றாக கிண்டிவிட்டு ஒரு பத்து நிமிடம் குழம்பை கொதிக்கவிடவும். இதன் பின் சிறிதளவு கொத்தமல்லி இலைகள் போட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்போது இந்த மட்டன் குருமாவை சுட சுட ஆவி பறக்க இட்லி, தோசைக்கு சாப்பிட்டா அம்புட்டு ருசியா இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here