முட்டை பணியாரம் சாப்டருப்பீங்க.., சிக்கன் 65 பணியாரம் சாப்ட்ருக்கீங்களா?? சூப்பர் ரெசிபி இதோ!!

0
முட்டை பணியாரம் சாப்டருப்பீங்க.., சிக்கன் 65 பணியாரம் சாப்ட்ருக்கீங்களா?? சூப்பர் ரெசிபி இதோ!!
முட்டை பணியாரம் சாப்டருப்பீங்க.., சிக்கன் 65 பணியாரம் சாப்ட்ருக்கீங்களா?? சூப்பர் ரெசிபி இதோ!!

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து இனிப்பு பணியாரம் செய்து கொடுத்துருப்பாங்க. ஆனா இன்னைக்கு அந்த பணியார ரெசிபியில் கொஞ்சம் டிப்ரெண்டா சிக்கன் சேர்த்து சுவையான சிக்கன் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

  1. சிக்கன் – 150 கிராம்
  2. முட்டை – 5
  3. மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  4. உப்பு – தேவையான அளவு
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  6. சிக்கன் மசாலா – 1 டீஸ்பூன்
  7. மிளகு தூள் -2 டீஸ்பூன்
  8. சின்ன வெங்காயம் – 5
  9. தக்காளி – 1

செய்முறை விளக்கம்;

இந்த சிக்கன் பணியார ரெசிபி சமைப்பதற்கு ஒரு பவுலில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு அதோடு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள் 1 டீஸ்பூன், சிக்கன் மசாலா மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ளவும். இப்போது ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் நாம் மசால் தடவி வைத்துள்ள சிக்கனை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பிறகு இதை சின்ன சின்னதாக கட் செய்து கொள்ளவும். இப்போது மற்றொரு பவுலில் 5 முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி, சிறிதளவு உப்பு , மிளகு தூள் சேர்த்து கொள்ளவும். இதோடு பொரித்த சிக்கனை போட்டு நன்றாக கலக்கி விட்டு கொள்ளவும். இதன் பிறகு அடுப்பில் பணியார கல்லை வைத்து அதில் நாம் ரெடி செய்து வைத்துள்ள இந்த முட்டை சிக்கன் கலவையை ஊற்றி பணியாரமான சுட்டு எடுக்கும். இப்போது நமக்கு சுவையான சிக்கன் பணியாரம் தயார்.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை.., சட்டத்துறை அமைச்சர் உறுதி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here