‘டாவின்சி ,வெரிட்டாஸ்’ பயணத் திட்டங்கள்… – நாசா விஞ்ஞானிகளின் வெள்ளி கிரக ஆய்வு!!!

0

வெள்ளி கிரகத்தை ஆராய நாசா விஞ்ஞானிகள்  அறிவியல் பூர்வ பயணத்தை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை 2028 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் செய்யவுள்ளனர். இந்த திட்டங்களுக்கு டாவின்சி ,வெரிட்டாஸ் என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

பூமிக்கு அருகில் உள்ள வெள்ளி கிரகத்தை பற்றி அறிய இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர். இது ஒரு அறிவியல் சார்ந்த பயணமாக அமைகிறது. கடந்த 10 வருடங்களில்  இல்லாத அளவு இது ஒரு புதிய திட்டமாகும். இந்த வெள்ளி கோள் ஆனது பூமிக்கு மிக அருகில் இருப்பதால் அதன் தட்ப வெப்பநிலை மற்றும் புவியியல் தன்மை பற்றி அறியவே இந்த ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது.

இந்த இரு திட்டங்களையும் டாவின்ஸ் மற்றும் வெரிட்டாஸ் என்று நாசா விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இதில் டாவின்ஸ் என்பது வெள்ளி எப்படி தோன்றியது, வளர்ந்தது என்ற விவரங்களை அறியும் ஆய்வையும், வெரிட்டாஸ் என்பது வெள்ளியின் வரைபடத்தையும் புவியியல் வளர்ச்சியையும் பூமிக்கும் வெள்ளிக்கும் உள்ள வித்தியாசத்தையும் ஆராய உள்ளது என தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here