வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் இத்தனை கோடியா?? சந்தோஷத்தில் ஆட்டம் போடும் சிம்பு ரசிகர்கள்!!

0
வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் இத்தனை கோடியா?? சந்தோஷத்தில் ஆட்டம் போடும் சிம்பு ரசிகர்கள்!!
வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் இத்தனை கோடியா?? சந்தோஷத்தில் ஆட்டம் போடும் சிம்பு ரசிகர்கள்!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வெந்து தணிந்தது காடு:

சினிமாவில் தனக்குனு ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சிலம்பரசன்.டி .ஆர். இவரது நடிப்பில் கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆன வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் நடிகர் சிம்பு மாறுபட்ட கதாபாத்திரமும், ஏ ஆர் ரகுமானின் அழகாக இசையும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் கௌதம் மேனன் இயக்கிய படமா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். ஏனென்றால் இதுவரை ஸ்டைலிஷ் கதையை வடிவமைத்த கௌதம் மேனன், இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கேங்ஸ்டர் கதையாக எடுத்துள்ளார். இந்நிலையில் இப்படம் நெகட்டிவ் விமர்சனங்கள் இல்லாமல் திரையில் வெற்றிநடை போட்டு வருகிறது.

தனுஷ் படத்தின் ரன்னிங் டைம், சென்சார் சான்றிதழ் வெளியீடு – படும் குஷியில் ரசிகர்கள்!!

நடிகர் சிம்புக்கு கடைசியில் வெளியான மாநாடு படத்தின் வசூலை, இந்த திரைப்படம் முறியடிக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் முதல் நாளிலே கிட்டத்தட்ட 10 கோடி வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை ரூ. 48 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் அதிகமான வசூலை அள்ளும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here