சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மாஸ் அப்டேட் – புகைப்படத்தை பார்த்து கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் Second Look போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் பாவமாக, அழுக்கு லுங்கி மற்றும் பனியனுடன் இவரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

அன்பானவன், அடங்காதவன், அசாரதவன் படத்திற்கு பிறகு பெரிதாக தமிழ் சினிமாவில் சிம்புவால் தலைகாட்ட முடியவில்லை. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சிம்பு தாமதமாக வருவதால் இவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இருந்து ரெட் கார்டு தரப்பட்டது.

ஆனால் அதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இவருக்கு அளிக்கப்பட்ட ரெட் கார்டு திரும்பி பெறப்பட்டது. இதனால் சிம்புவின் அடுத்த படமான வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் Second Look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க எடையை குறைத்து மிகவும் பாவமாக இருக்கும் சிம்புவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here