முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 1 லட்சம் நிதியுதவி..! 

0

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ், தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். மேலும் முதல்வர் இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(ழு)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக பல்வேறு தொழிலதிபர்கள், நடிகர் சிவகுமார் குடும்பத்தினர், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின் உட்பட பல திரை பிரபலங்கள், வியாபாரிகள் எனப் பல தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். பொதுமக்களும் தங்களால் முடிந்த பண உதவிகளை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.இதற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here