டாக்டர் பட்டத்தை தன் வசமாக்கிய நடிகர் சிம்பு – இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

0

நடிகனாக மட்டும் அல்லாமல் இசை, இயக்கம் என அனைத்து துறைகளிலும் தனது திறமையை காட்டி வரும் சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. அந்த புகைப்படம் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

சிம்புவுக்கு டாக்டர் பட்டம்:

நடிகர் சிம்பு  தனது தந்தையான டி. ராஜேந்தர் இயக்கத்தில் ‘காதல் அழிவதில்லை’ என்னும் திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் மட்டும் அல்லாமல் இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார். காதல் அழிவதில்லை திரைப்படத்தில் தொடர்ந்த பயணம் கோவில், குத்து, வல்லவன் என மாநாடு திரைப்படம் வரை இவரது பயணம் நீண்டுள்ளது. தற்போது வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் ”விண்ணைத்தாண்டி வருவாயா” என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வெளியாகி 22ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த திரைப்படத்தில் சிம்புவின் நடிப்பை அடித்துக்கொள்ள யாருமில்லை. சமீபத்தில் வெளியான இவரின் மாநாடு பட்டையை கிளப்பியது. சினிமாத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நிறுவனர் ஐசரி கணேஷ் தலைமையில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது சம்மந்தப்பட்ட போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here