இவருடன் நடிக்கும் போது சிவகார்த்திகேயனுடன் நடிப்பது போல இருந்தது – சக நடிகரை பாராட்டி தள்ளிய சூரி!!

0

பிக் பாஸ் முகேன் முதன்முதலாக வெள்ளி திரையில் அறிமுகமாக உள்ள வேலன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய காமெடி நடிகர் சூரி, முகேனுடன் வேலை செய்தது சிவகார்த்திகேயனுடன் வேலை செய்யும் எண்ணத்தை கொடுத்தது என கூறியுள்ளார்.

சக நடிகைகளுக்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த ஷாக்கிங் அட்வைஸ்.. தீயாய் பரவும் இன்ஸ்டா ஸ்டோரி!!

வேலன் இசை வெளியீட்டு விழா:

ஆல்பம் பாடல்களை இசையமைத்து எழுதி பாடி பிரபலமானவர் முகேன் ராவ் . மேலும் இவர் மலேசியாவில் வாழும் தமிழ் வம்சாவளி ஆவார். இவர் பாடிய அபிநயா என்ற பாடல் இணையதளத்தில் வெகு விரைவாக பரவி மக்கள் மனதை கவர்ந்தது. மேலும் முகின் 2019-தில் விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று டைட்டில் வின்னரும் ஆனார். இதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் வேலன் படம். இதில் முகின் ஹீரோவாகவும், மீனாட்சி கோவிந்தராஜன் என்பவர் ஹீரோயினாகவும், காமெடி நடிகர் சூரி, பிரபு நடித்து உள்ளனர். மேலும் இந்த படம் கிராமத்து பாங்கில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வேலைகள் முடிந்த நிலையில், டீசர் அக்டோபர் மாதமே வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இவருடன் நடிக்கும் போது சிவகார்த்திகேயனுடன் நடிப்பது போல இருந்தது - சக நடிகரை பாராட்டி தள்ளிய சூரி!!
இவருடன் நடிக்கும் போது சிவகார்த்திகேயனுடன் நடிப்பது போல இருந்தது – சக நடிகரை பாராட்டி தள்ளிய சூரி!!

இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் ஒரு கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் நடிகர் சூரி பேசுகையில், ஒரு மேடை ஏறினால் போதும், முகின் எளிதாக 100% கைதட்டல் மற்றும் விசில்களை எளிதில் வாங்கும் திறன் படைத்தவர் என்றும், முகேனுடன் பணிபுரிவது கிட்டத்தட்ட சிவகார்த்திகேயனுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும் நினைவை கொடுத்தது என்றும், மேலும் முகேனுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் உள்ளது என்று சூரி பாராட்டியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here