சுவை அள்ளும் சைவ ஈரல் கிரேவி..,ட்ரை பண்ணி பாருங்க மிச்சமே இருக்காது!!!

0
சுவை அள்ளும் சைவ ஈரல் கிரேவி..,ட்ரை பண்ணி பாருங்க மிச்சமே இருக்காது!!!
சுவை அள்ளும் சைவ ஈரல் கிரேவி..,ட்ரை பண்ணி பாருங்க மிச்சமே இருக்காது!!!

நம்மில் பலருக்கு சைவ உணவுகளை, அசைவ உணவை போன்று காரசாரமாக சமைத்து சாப்பிட பிடிக்கும். அப்படி ஒரு சுவையான, காரசாரமான ஒரு கிரேவி ரெசிபி செய்வது எப்படி என்றுதான் நாம இன்னைக்கு பார்க்கிறோம். அதிலும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பாசிப்பருப்பை வைத்து சுவைக்கு பஞ்சமில்லாத சைவ ஈரல் கிரேவி ரெசிபி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்;

பாசிப்பயறு – 1/2 கிலோ

சின்ன வெங்காயம் – 50 கிராம்

தக்காளி – 3

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா – 2 டீஸ்பூன்

கடுகு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கருவேப்பிலை – சிறிதளவு

வரமிளகாய் – 3

இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த பாசிப்பயறு சைவ ஈரல் ரெசிபி சமைப்பதற்கு பாசிப்பயிரை முதல் நாள் இரவில் சுத்தமாக கழுவிய பின் ஊறவைத்து கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு இதோடு மிளகு, உப்பு, சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இதை இட்லி சட்டியில் ஊற்றி அவித்து கொள்ளவும். இதன் பிறகு இந்த பாசி பயறு இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் போட்டு தாளித்து விடவும்.

எல்லாம் போச்சே.., காவியா காதலிச்சது ஜீவாவையா?? கதறும் பிரியா.., ஈரமான ரோஜாவே ட்விஸ்ட்!!

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி போட்டு, அதோடு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி விடவும். மேலும் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது இதில் நாம் நறுக்கி வைத்துள்ள பாசிப்பயறு இட்லி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொத்தமல்லி இலைகள் போட்டு அடுப்பை ஆப் செய்து கொள்ளவும். இப்போது நமக்கு சுவையான சைவ இட்லி ஈரல் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here