காய்கறிகளின் விலை அதிரடி சரிவு – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

0

இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை அதிரடியாக குறைந்து உள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்தது. இது சாதாரண மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் அன்றாடம் வேலைக்கு சென்று சாப்பிடும் மக்கள் தினம் காய்கறிகள் வாங்க முடியாத சூழ்நிலைக்கு சென்றனர். நவம்பர் மாதத்தில் மாநிலம் முழுவதும் மழை பெய்ததும், தீபாவளி, கார்த்திகை உள்ளிட்ட விசேஷங்களுமே விலையேற்றத்திற்கு காரணமாகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கல்லூரிகள்!!

இந்நிலையில் டிசம்பர் 7 ம் தேதியான இன்று, காய்கறிகளின் விலை குறைந்து உள்ளது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று வரை 15 ரூபாயாக விற்ற தக்காளி இன்று 10 ரூபாய்க்கும், 30 ரூபாய் என விற்கப்பட்ட வெங்காயம் இன்று 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பீட்ரூட் 10 ரூபாய்க்கும், அவரைக்காய் 25 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது.

காய்கறிகளின் விலைப்பட்டியல் (ஒரு கிலோவுக்கு)

தக்காளி – ரூ.10
வெங்காயம் – ரூ.25
அவரைக்காய் – ரூ.30
பீன்ஸ் – ரூ.25
பீட்ரூட் – ரூ.10
வெண்டைக்காய் – ரூ.10
மாங்காய் – ரூ.40
நூக்கல் – ரூ.8
உருளைக் கிழங்கு – ரூ.35
முள்ளங்கி – ரூ.10
புடலங்காய் – ரூ.15
சுரைக்காய் – ரூ.15
பாகற்காய் – ரூ.20
கத்தரிக்காய் – ரூ.25
முட்டைகோஸ் – ரூ.6
குடை மிளகாய் – ரூ.25
கேரட் – ரூ.40
காளிபிளவர் – ரூ.20
சவுசவு – ரூ.8
தேங்காய் – ரூ.26
வெள்ளரிக்காய் – ரூ.10
முருங்கைக்காய் – ரூ.15
இஞ்சி – ரூ.30
பச்சை மிளகாய் – ரூ.20
கருணைக் கிழங்கு – ரூ.20
கோவைக்காய் – ரூ.15

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here