அடிக்கும் வெயிலின் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க இதை சாப்பிடுங்க…, இதுல அவ்வளவு பயன் இருக்கா??

0

தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமானது முதல், வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் குறிப்பாக கடந்த சில நாளில் வெயிலானது 100 டிகிரி செல்சியஸை தாண்டி அடித்து வருகிறது. இதனால், மக்களின் நலன் கருதி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் நடமாட வேண்டாம் மற்றும் நீர் சத்து நிறைந்த ஆதாரங்களை அதிக அளவில் சாப்பிடுமாறும் தமிழக அரசும் அறிவுறுத்துகிறது.

மேலும், மக்கள் தங்களது உடல் சூட்டை தணிக்கும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், கோடை வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முக்கியமாக உணவில் சேர்த்துக் கொள்ள கூடிய சில காய்கறிகள் குறித்து பின்வருமாறு காணலாம்.

சுரைக்காய்:

இது காய் வகையை சேர்ந்தாலும், 90% தண்ணீர் நிறைந்த ஊட்டச்சத்து மிக்க காயாக உள்ளது. இந்த காய் சாப்பிடுவதன் மூலம், நீரிழிவு பாத்திப்பை கட்டுக்குள் வைப்பதுடன் தேவையற்ற கொலஸ்ட்ராலையும் நீக்குகிறது.

குடைமிளகாய்:

இது உடல் சூட்டை நீக்கி, ஜீரண சக்தியை அதிகப்படுத்தி சோர்வு அடையாமல் இருக்க உதவுகிறது.

பச்சை இலை காய்கறிகள்:

இத்தகைய காய்கறிகளில், அரைக்கீரை உள்ளிட்டவைகளுடன் புதினா, மல்லி மற்றும் கருவேப்பிலையும் அடங்கும். இவை, இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலில் நீர் சத்தையும் சீராக வைக்க உதவுகிறது.

பூசணிக்காய்:

இதில், அதிக தண்ணீர் சத்து நிறைந்த வெள்ளை பூசணிக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்கிறது.

பாகற்காய்:

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பாகற்காய், உடலின் வெப்பநிலையை சமப்படுத்த உதவுகிறது.

மேலும், தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதில் சிறந்ததாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here