புரட்டாசி End ஸ்பெஷல் – சுலபமா செய்யலாம் வெஜ் KFC ஃபிரைடு சிக்கன்!!

0

ஃபிரைடு சிக்கன் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று. ஆனால் புரட்டாசி மாதம் என்பதால் பல பேர் வீட்டில் அசைவ உணவை தவிர்ப்பார்கள். அவர்களுக்காகவே ஃபிரைடு சிக்கன் சுவையில் வெஜ் KFC ஃபிரைடு சிக்கன் எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்

தேவையான பொருட்கள்:

வெட்டிவைத்த பலாக்காய் துண்டுகள் – 7

தயிர் – 200 கிராம்

இஞ்சி பூண்டு விழுது – 1 டிஸ்பூன்

சோள மாவு (Corn Flour) – 2 டிஸ்பூன்

மிளகு தூள் – 1 டிஸ்பூன்

மைதா மாவு – 150 கிராம்

சிவப்பு மிளகாய் – 6

கார்ன் ப்ளேக்ஸ் – தே.அளவு

உப்பு –  தே.அளவு

செய்முறை:

முதலில் தயிரில் உப்பு, மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதில் வெட்டி வைத்த பலாக்காய் துண்டுகளை போட்டு 2 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். பின்னர் சோள மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும்.

 

பின்னர் மைதா மாவில் மிளகு தூள், உப்பு, நொறுக்கிய கார்ன் ப்ளேக்ஸ் மற்றும் சிவப்பு மிளகாய்யை நன்றாக பொடியாக்கி கலந்து கொள்ளவும். இப்பொழுது ஊற வைத்த பலாக்காய் துண்டுகளை மைதா மாவு கலவையில் புரட்டி சோள மாவு கரைத்து வைத்துள்ள கலவையில் தொட்டு எடுத்து எண்ணெயில் நன்றாக பொன்னிறம் ஆகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து பொரித்து எடுக்கவும். தற்போது சூடான சுவையான வெஜ் KFC ஃபிரைடு சிக்கன் ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here