பட்டையை கிளப்ப வரும் புது சீரியல்.., அதுவும் இந்த டாப் நடிகர் நடிக்கிறாரா?? ஜீ தமிழ் கொடுத்த மாஸ் அப்டேட்!!

0
 பட்டையை கிளப்ப வரும் புது சீரியல்.., அதுவும் இந்த டாப் நடிகர் நடிக்கிறாரா?? ஜீ தமிழ் கொடுத்த மாஸ் அப்டேட்!!
சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காவே  டிவி சேனல்கள் புது புது சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வர இருக்கும் சீரியல் தான் ”வீரா” . இதில் ரோஜா சீரியல் நடிகர் சிப்பு சூரியன், அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இதில் தவமாய் தவமிருந்து சீரியல் சிவகுமார் முக்கிய ரோலில் நடிக்கிறார். இதோடு பேரன்பு சீரியல் வைஷ்ணவி இதில்  ஹீரோயினாக நடிக்கிறார்.  3 தங்கைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஹீரோயினின் அண்ணன் இறந்து விடுவது போலவும், இதையடுத்து தான் ஹீரோவின் என்ட்ரி இருப்பது போலவும் இதன் ப்ரோமோ அமைந்துள்ளது. அதன்படி இதில் ஹீரோவாக ரஜினி சீரியல் அருண் நடிக்கவுள்ளார். இவ்வாறு எக்கசக்க பிரபலங்கள் இணைந்து நடிக்கும் வீரா சீரியல் கூடிய விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here