Thursday, April 25, 2024

சரணாலயப் பகுதிகளை மேம்படுத்துவதற்காகவே சுற்றுப் பரப்புக் குறைப்பு – தமிழக அரசு

Must Read

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், தொழிற்சாலைகள் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும், அப்பகுதியைச் சுருக்கப் போவதாகவும் ராமதாஸ் குற்றச்சாட்டு.

ராமதாஸ்ஸின் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் உள்ள முக்கியச் சரணாலயங்களில் ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து செல்வது வழக்கம்.

திருமண புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தனக்கு திருமணம் என்று அறிவிக்கிறாரா சோனியா அகர்வால்?

இச்சரணாலயப் பகுதி மத்திய வனவிலங்கு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியைச் சுருக்கி ஆணை வெளியிடப்படுவதாகவும், அப்பகுதியில் தொழிற்சாலைகள் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தடை விதிக்க வழக்கு

அச்சரணாலயம் அருகே செயல்பட்டு வரும் சன் ஃபார்மா நிறுவனம் அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய இடம் ஒதுக்கப்படுவதனால் அதற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் வெண்ணிலா வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மேம்பாட்டுப் பணிகளுக்கான விரிவாக்கம்

இதில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக சன் ஃபார்மா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற்றிருந்தாலும், மத்திய வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் ஒப்புதல் நிராகரிக்கப்பட்டுள்ளதால், விரிவாக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், சரணாலயம் இருக்கும் பகுதிகளை மேம்படுத்துவதற்காகவே அதன் சுற்றுப் பரப்பளவை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: பிராண்ட் தூதராக தடகள வீரர் உசேன் போல்ட் நியமனம்.. வெளியான முக்கிய தகவல்!!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஐசிசி T20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -