வருணின் வாழ்க்கையை அப்படியே புரட்டி போட்ட பிக் பாஸ் – வருணுக்கு அடித்த லக்கை பாருங்க!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது முக்கிய போட்டியாளராக விளையாடி கொண்டிருக்கும் வருணுக்கு, உள்ளே இருக்கும் போதே மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் வருண் முக்கிய போட்டியாளராக விளையாடி கொண்டு வருகிறார். அவரது தனித்துவமே அவரது சிறப்பு. இதனாலே மக்கள் ஓட்டின் அடிப்படையில் வருணை தொடர்ந்து எலிமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர். வருணின் குடும்பமே திரைப்பட துறையை சேர்ந்தவர்கள் தான். ஆனால் வருண் நேரடியாக திரைப்படங்களில் நடிக்காமல் விஜய் நடித்த ”தலைவா” திரைப்படத்தில் குரூப் டான்சராகவே திரைப்பயணத்தை துவங்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதற்கு பிறகு வருண் பப்பி திரைப்படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து ஜோஷுவா என்கிற ஆக்சன் திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இரண்டு படங்கள் நடித்தும் பெரிதாக எந்த வரவேற்பும் இல்லாத நிலையில் பிக் பாஸ் சென்றார். பிக் பாஸ் சென்ற பிறகே இவருக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட புகழ் கிடைத்தது. இந்த நிலையில் வருண் தற்போது மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் சென்ற பிறகு பலரின் வாழ்க்கை அப்படியே மாறிவிட்டது. அந்த பட்டியலில் வருணும் தற்போது சேர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here