வாரிசு’ படத்தின் இசைவெளியீட்டு விழா தேதி வெளியீடு.., செம குஷியில் தளபதி ரசிகர்கள்!!

0
வாரிசு' படத்தின் இசைவெளியீட்டு விழா தேதி வெளியீடு.., செம குஷியில் தளபதி ரசிகர்கள்!!

தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சமீபகாலமாக குறிப்பாக வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை தந்து கொண்டிருக்கிறார் விஜய் . அந்த வகையில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் தளபதி 67ல் கூட்டணி சேர்கிறார். இவர் இயக்கிய விக்ரம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், தளபதி 67 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய், தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபைலி இயக்குகிறார். அண்மையில் தளபதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. அதையடுத்து படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை.இந்நிலையில் வாரிசு திரைப்படம் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான விஜய் மற்றும் ராஷ்மிகாவின் செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து மேலும் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 5 அல்லது 11ம் தேதி பிரமாண்டமாக நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தளபதி மேடையில் பேசும் தருணத்திற்கு அனைத்து ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தோடு வெயிட் பண்ணுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here