மீண்டும் வசூலில் சாதனை படைத்த ‘வாரிசு’ விஜய்…,படக்குழு வெளியிட்ட விவரம்…,

0
மீண்டும் வசூலில் சாதனை படைத்த 'வாரிசு' விஜய்...,படக்குழு வெளியிட்ட விவரம்...,
மீண்டும் வசூலில் சாதனை படைத்த 'வாரிசு' விஜய்...,படக்குழு வெளியிட்ட விவரம்...,

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் உலகளவில் சுமார் 300 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

வாரிசு வசூல்

பொங்கல் பண்டிகை விருந்தாக திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘வாரிசு’. நடிகர் விஜய் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு (வாரிசுடு) ஆகிய மொழிகளில் திரையிடப்பட்டது. அந்த வகையில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக அமைந்த ‘வாரிசு’ திரைப்படம் எவ்வளவு வசூல் குவித்தது என்ற விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தனியார் பள்ளிகளுக்கு புதிய நடைமுறை., கட்டண வசூலுக்கு கட்டுப்பாடு! நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு!!

அந்த வகையில், கடந்த 3 வாரங்களில் மட்டும் வாரிசு திரைப்படம் சுமார் 300 கோடி வசூல் குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடம் ஷேர் செய்துள்ள ‘வாரிசு’ படக்குழு, ‘வசூல் மன்னன் (விஜய்) For a Reason’ என்ற கேப்ஷனுடன் குறிப்பிட்டுள்ளது. இந்த வசூல் மூலம் ‘வாரிசு’ திரைப்படமும் நடிகர் விஜய்க்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here