ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா.., சொல்லி அடிக்கும் வாரிசு படத்தின் வசூல்!!

0
ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா.., சொல்லி அடிக்கும் வாரிசு படத்தின் வசூல்!!
ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா.., சொல்லி அடிக்கும் வாரிசு படத்தின் வசூல்!!

வாரிசு மற்றும் துணிவு படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு – துணிவு:

தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு என்டர்டைன்மென்ட் நியூஸாக இருந்து வருவது தான் வாரிசு – துணிவு திரைப்படங்கள். இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் அஜித்-விஜய். அவர்களின் திரைப்படங்கள் தியேட்டருக்கு வந்தால் போதும் அந்த படம் சூப்பர் ஹிட் லிஸ்ட் தான். மேலும் அவர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்ற ஒன்றை கொடுக்காமல் அவர்களின் படங்கள் வெற்றிகரமாக ஓடுகிறது என்று சொன்னால் மிகையாகாது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஒரே நாளில் மோதிக் கொண்டது. தொடக்கத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் வசூலில் முன்னணியில் இருந்த நிலையில், தற்போது வாரிசு திரைப்படம் போக போக கல்லா கட்ட தொடங்கியுள்ளது. மேலும் தமிழ் நாட்டில் இரு படங்களுக்கும் இடையே ஒரு கோடிகள் வித்தியாசம் இருந்தாலும், வெளிநாட்டில் துணிவு படத்தை விட வாரிசு படம் தான் அதிக கோடிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

சந்தியாவின் அசால்ட்டால் தீவிரவாதிகளிடம் சிக்கிய சரவணன்.., சிவகாமி எடுக்கப்போகும் முடிவு என்ன?? ராஜா ராணி 2!!!

அதாவது வெளிநாட்டில் வாரிசு படம் ரூ. 75 கோடியும் , துணிவு திரைப்படம் 65 கோடியும் இது வரை வசூல் செய்துள்ளது. ஆனால் இதுவரை லாபத்தை கொடுக்கவில்லை என்று வாரிசு பட குழுவினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மாறாக அஜித் கேரியரில் இந்த வசூலை தொட்டது இல்லை என்று படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here