உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.450 கோடி செலவில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் கட்டப்பட இருக்கிறது. இந்த மைதானம் கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பரளவில், அதிகபட்சமாக 30,000 பேர் அமரும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி இருக்க, வாரணாசியில் அமைக்கப்பட இருக்கும் கிரிக்கெட் மைதானத்தின் மாதிரி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பார்க்கிங் துவங்கி, டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், பயிற்சி பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர்கள் மண்டலம், அலுவலகம் என பெரிய அளவில் அமைக்கப்பட இருக்கும் இந்த மைதானத்திற்கு பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி அடிக்கல் நாட்ட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.