வடிவேலு டயலாக்கை பட டைட்டிலாக வைத்த ஜீவா – பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அப்டேட்!!

0
வடிவேலு டயலாக்கை பட டைட்டிலாக வைத்த ஜீவா - பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அப்டேட்!!
வடிவேலு டயலாக்கை பட டைட்டிலாக வைத்த ஜீவா - பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அப்டேட்!!

நடிகர் ஜீவா தற்போது சந்தோஸ் ராஜன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் டைட்டில்லை ஜீவா பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

தன் மருமகளுடன் நெருக்கமாக இருக்கும் பாக்கியலட்சுமி நடிகை – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

வரலாறு முக்கியம்:

தனது தந்தையில் தயாரிப்பில் உருவான ஆசை ஆசையாய் என்னும் திரைப்படத்தின் மூலமாகவே நடிகர் ஜீவா தமிழ் திரையுலகில் புகுந்தார். இதற்கு பிறகு இவர் நடித்த ராம் திரைப்படத்தின் மூலமாகவே இவரது நடிப்பு மக்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. இதற்கு அடுத்து கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், நீதானே என் பொன்வசந்தம், என்றென்றும் புன்னகை, கலகலப்பு 2, களத்தில் சிந்திப்போம் மற்றும் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் அல்லாமல் ஹிந்தியிலும் இவர் நடித்த 83 திரைப்படம் தற்போது திரையரங்கங்களில் வெளியானது.

வடிவேலு டயலாக்கை பட டைட்டிலாக வைத்த ஜீவா - பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அப்டேட்!!
வடிவேலு டயலாக்கை பட டைட்டிலாக வைத்த ஜீவா – பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அப்டேட்!!

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் ஜீவா தற்போது சந்தோஸ் ராஜன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ”வரலாறு முக்கியம்” என்ற டைட்டில்லை ஜீவா பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்பட நாயகி காஷ்மீரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மலையாளத்தில் ஜிமிக்கி கம்மல் பாடலை இயக்கிய ஷான் ரகுமான் தான் இந்த திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் எப்போது திரையரங்கங்களில் வெளியாகும் என அறிவிப்பு பின்பு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here