வன்னியர்க்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு – தமிழக முதல்வர் மசோதா தாக்கல்!!

0

தமிழகத்தில் தற்போது வன்னியர்களுக்கு எம்பிசிவி என்று தனியான பிரிவு ஒன்றை பிரித்து அதற்கு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இடஒதுக்கீடு:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு அதிக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் பல்வேறு போராட்டங்களும் பிரச்சனைகளும் நிலவி வந்தது. தற்போது தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறார். மேலும் அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை கவரும் வண்ணத்தில் இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த வரிசையில் மக்களின் நீண்ட கால கோரிக்கையான வன்னியர்களின் உள் ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரித்துள்ளனர். தற்போது இதுகுறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் கூறியதாவது, தற்போது மிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பிரிவிற்கு எம்பிசிவி என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ – நைட் பிராங் நிறுவனம் அறிவிப்பு!!

எம்பிசி பிரிவில் உள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 சதவீதம் சீர்மரபினர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீர்மரபினரில் மொத்தம் 68 பிரிவுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாதிகள் குறித்த விவரங்கள் சேகரித்த பின்பு மசோதா மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here