சன் டிவி நடிகருக்கு வாழ்த்து சொன்ன வனிதா – அதுவும் இதற்காகவா??

0
பிரபலங்களுடன் Night Party செய்த சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் - சமூகவலைத்தளங்களில் வைரல்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது சீரியல் நடிகருக்கு நண்பர்கள் தின விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வனிதா

வனிதா என்றாலே தெரியாத ஆள் கிடையாது. ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்போது வரை பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். அதுவும் அவரது திருமண விஷயத்தில் தான் பிரச்சனைகள் உருவானதே.

இரண்டு திருமணங்கள் ஆகியும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டு வந்த வனிதா தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதில் ஒன்றான பிக்கப் ட்ராப் என்ற படத்தில் வெளியான புகைப்படத்தால் 4வது திருமணம் என்று புரளியை கிளம்பினார். இதனால் கடுப்பான வனிதா நான் 40 திருமணம் கூட செய்துகொள்வேன் என்று அனைவர்க்கும் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் தான் வனிதா தனது நண்பர் ஒருவருக்கும் நண்பர்கள் தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுவும் யாருக்கு என்று பார்த்தால் தெய்வமகள் சீரியலில் ராஜுவாக நடித்த அரவிந்த்திற்கு வாழ்த்து சொல்லியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here