வெள்ளை நிற உடையில் மிடுக்காக போஸ் கொடுத்த வனிதா – கிண்டலடிக்கும் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட வனிதா விஜய் குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போதும் அதே போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வனிதா

நடிகர் விஜய் குமாரின் மகளாகிய வனிதா தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருபவர். தனது மகன் ஸ்ரீஹரி பிரச்சனையில் ஆரம்பித்து பீட்டர் பால் வரை பல பிரச்சனைகளில் சிக்கி வந்தார். தனது அப்பா சொத்துக்கள் எதுவும் தராமல் தன்னை ஏமாற்றுவதாகவும், தனது அம்மாவான மஞ்சுளாவையும் இத்தனை நாட்கள் ஏமாற்றியதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறியிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில் தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. தனது அராஜகமான பேசினாலும், நடவடிக்கையாலும் அனைவரையும் காயப்படுத்தினார். இதனால் மக்களுக்கும் அவரை பிடிக்காமல் போனது. அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டிலை தட்டி சென்றார்.

“குக் வித் கோமாளி 2” வின்னர் இவர் தான் – வைரலாகும் புகைப்படம்!!

அதன் பிறகு யூடியூப் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்நிலையில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டது. இதுவே பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. அதன் பிறகு தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது பிரசாந்த் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் வெள்ளை நிற உடையில் மிடுக்காக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்து பலரும் அவரை கிண்டல் செய்தாலும், பலரும் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here