கல்யாணம் ஆகலையா?? அப்போ ஓகே… புது அவதாரம் எடுத்த வனிதா விஜயகுமார்!!!

0

நடிகை வனிதா விஜயகுமார், வக்கீல் கெட்டப்பில் விஜய்யின் தெறி படத்தின் ஒரு டயலாக்கிற்கு ரீல்ஸ் செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த இணையவாசிகள் என்ன?? வக்கீல் கெட்டப்ல ஆளே மாறிட்டீங்க.. என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

பெரும்பாலான நடிகர், நடிகைகள் சர்ச்சைகளில் மாட்டி கொள்ளாமல் ஒதுங்கி வாழவே விரும்புவார்கள். ஆனால் அதற்கெல்லாம் மாறாக சர்ச்சை ராணியாக திகழ்பவர் நடிகை வனிதா விஜயகுமார். மாதத்தில் ஒரு தடவையாவது இவரை பற்றிய சர்ச்சை இணையத்தில் எழாமல் இருக்காது. சமீபத்தில் கூட தான் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி, விஜய் டிவி-யின் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து விலகினார் நடிகை வனிதா.

தற்போது டைரக்டர் அன்பு சரவணன் இயக்கத்தில் சிவப்பு மனிதர்கள் படத்தில் வக்கீலாக நடிகை வனிதா விஜயகுமார் நடிக்கிறார். படப்பிடிப்பு தலத்தில் விஜயின் தெறி படத்தில் வரும் ‘கல்யாணம் ஆகிடுச்சா?? யாராச்சும் லவ்..’ என்ற வசனத்திற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அதை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதற்கு இவர் ரசிகர்கள் ‘வனிதா அக்கா.. ரொம்ப சூப்பரா இருக்கு கா..’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here