வெள்ளை நிற சேலையில் கும்முனு போஸ் கொடுத்த வனிதா – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். சமூக வலைத்தளங்களை திறந்தாலே வனிதா பேச்சு இல்லாத நாளே இல்லை என்று சொல்லாம். மேலும் தொடர்ந்து தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் வனிதா. தற்போது வெள்ளை நிற சேலையில் கும்முனு போஸ் கொடுத்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வனிதா

நடிகர் விஜயகுமாரின் மகளாகிய வனிதா ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி தான் வருகிறார். முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து தற்போது வரை பல போராட்டங்களை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். விஜய் உடன் ‘சந்திரலேகா’ படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான வனிதா அடுத்து ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த திருமணம் முறிவில் முடியவே விவாகரத்து பெற்று மறுமணம் செய்து கொண்டார். தனது மகனுக்காக பல கோர்ட் வாசலில் ஏறி இறங்கினார். ஆனாலும் எந்த பலனும் இல்லை. இவரின் இரண்டாவது திருமணமும் முறிவில் முடிந்தது. அதன் பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பலரையும் கண்டபடி பேசியதாலேயே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். எப்படியோ ஓரளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவிட்டு வெளியில் வந்த வனிதா யூடுப் சேனல் ஆரம்பித்தார். அதற்கு உதவியாக இருந்த பீட்டர் பாலையும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணமும் விவாகரத்தில் தான் முடிந்தது.

அர்ச்சனாவை விட்டு பிரியும் ரியோ & நிஷா!!

மக்கள் பலரும் இந்த கல்யாணம் வேண்டாம் என எவ்வளவு சொல்லியும் வனிதா கேட்கவும் இல்லை. ஆனால் இந்த பிரேக்கப் பிறகு வந்த எப்பொழுதோ தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார். ஆனால் பாவம் பீட்டர் பால் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. இதுவரை அவரை பற்றி தகவலும் இல்லை.

மேலும் வனிதா தனது ஹேர் ஸ்டைல் நடை உடை என அனைத்தையும் மாற்றியுள்ளார். தொடர்ந்து தனது வலைப்பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் கும்முனு போஸ் கொடுத்துள்ளார் வனிதா. இதற்கு பலரும் அழகா இருக்கீங்க. ஐ லவ் யூ, எப்படி எவ்ளோ இளமையா இருக்கீங்க?? என்று கமன்ட் செய்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here