நீ என்ன என்னோட ஆளா?? பொண்ணுகிட்ட பேசுனா பொறாமை படுறதுக்கு?? விஜேவை அலறவைத்த வனிதா விஜயகுமார்!!

0

சர்ச்சைகளின் ராணியாக திகழும் வனிதா ஹோட்டல் திறப்பு விழாவில் கூட விஜே ஒருவரை விட்டு வைக்காமல் கலாய்த்து தள்ளியுள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜய் குமார் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி அதன் மூலம் பிரபலமாகி வருபவர். அதிலும் திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே வனிதாவின் பெயர் தான் நியாபகத்திற்கு வரும். அடாவடி பேச்சு, நான் தான் அனைத்தும் என்று நினைக்கின்ற அந்த ஆணவத்தால் தான் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளானார்.

மூன்று திருமணம் வரை செய்துகொண்ட வனிதா விஜயகுமாருக்கு 4வது திருமணம் நடக்க போகிறது என்ற வதந்தியும் இணையத்தில் வைரலானது. அதற்கு தான் வனிதா அது தன்னுடைய விருப்பம் 40 திருமணம் வரை செய்துகொள்வேன் என்று கூறியிருந்தார்.

சர்ச்சைகள் மூலம் அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்தது தான் மிச்சம். 3 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். மேலும் முக்கிய படம் ஒன்றில் போலீசாக நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் கடை திறப்பு விழாவில் எல்லாம் கலந்துகொண்டு வருகிறார். அந்த புகைப்படம் செய்தி வைரலாகி வருகிறது.

அந்த திறப்பு விழாவில் முக்கிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது விஜே ஒருவர் வந்து வனிதாவிடம் வந்து நமஸ்தே என்று சொல்ல அதற்கு வனிதாவோ என்ன தமிழன் தானே நீ வணக்கம் என்று சொல் என்று மிரட்டியுள்ளர். அருகில் இருந்த நடிகை பூர்ணாவை பார்த்து அவர்களை பேட்டி எடுக்கலாமா?? என்று கேட்க அதற்கு கொந்தளித்த வனிதா நீ என்ன எனக்கு பாய் ஃபிரெண்டா?? நீ வேற பொண்ணுகிட்ட பேசுனா கோவப்படுறதுக்கு என்று கண்டபடி பேசியுள்ளார். இதனால் அந்த விஜே ஷாக்காகியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here