வனிதாவுடன் நான் 4வது திருமணம் செய்து கொண்டேனா?? உண்மையை போட்டு உடைத்த பவர் ஸ்டார்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது மீண்டும் ஓர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வனிதா

விஜய் குமாரின் மகளாகிய வனிதா ஆரம்பத்தில் இருந்தே தனது மகனுக்காக பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அப்பொழுதிருந்தே வனிதாவை அனைவருக்குமே தெரியும். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்ப நாளிலேயே அவரது சுயரூபத்தை காட்ட ஆரம்பிக்க சர்ச்சைகளின் ராணியாக வலம் வந்தார்.

வீட்டை விட்டு வெளியேறிய அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு தான் தான் பிரச்சனையே ஏற்பட்டது. அவருடன் கூட வாழாமல் 6 மாதங்களிலேயே விவாகரத்து செய்தார். இப்படி வனிதாவை பற்றி சொல்லி கொண்டே செல்லலாம்.

ஆனாலும் தனது முயற்சியை மட்டும் இன்னும் கைவிடாமல் இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் சில பிரச்சனைகளால் அதிலிருந்து விளக்கினார். அதற்கு ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்றும் பலரும் கூறி வந்தனர்.

இந்த பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில் மீண்டும் ஒரு வனிதா பவர் ஸ்டாரை 4 வது திருமணம் செய்துகொள்வது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. இது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பவர் ஸ்டார் அது வெறும் படத்திற்காக எடுத்த புகைப்படம் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here